பச்சை மிளகாயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன.பச்சை மிளகாய் நீரிழிவு நோய்க்கு சிறந்த தீர்வு.மிளகாய் தூள் இரத்த நாளங்கள் மற்றும் செல்களை சீராக வைக்கிறது.
தென்னிந்திய உணவுகளுக்கு காரத்துடன் சேர்ந்த ருசியை தருவது மிளகாய். மிளகாய் சேர்க்காத உணவு வகைகளே இருந்திட முடியாது. பொதுவாகவே நம் தென்னிந்திய உணவுகளில் மசாலா பொருட்களை சற்றே தூக்கலாக சேர்ப்பது வழக்கம். மிளகாய் உணவிற்கு ருசியை தருவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியது. மிளகாயில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை அடங்கியிருக்கிறது. நாம் பயன்படுத்தக்கூடிய மிளகாய் இரண்டே வகைதான்.
ஒன்று பச்சை மிளகாய், மற்றொன்று சிவப்பு மிளகாய். இந்த சிவப்பு மிளகாய் பெரும்பாலும் பொடியாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தை பொருத்தமட்டில் உடலுக்கு நல்லது பச்சை மிளகாயா அல்லது சிவப்பு மிளகாயா என்பதை பார்ப்போம். முதலில் சிவப்பு மிளகாய்க்கும் பச்சை மிளகாய்க்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்வோம்.
பச்சை மிளகாயில் நீர்சத்து இருப்பதோடு அதில் கலோரிகள் முற்றிலுமாக இருப்பதில்லை. பச்சை மிளகாயை காயவைத்தால் கிடைப்பதே சிவப்பு மிளகாய். அரைத்து பொடியாக பயன்படுத்தக்கூடிய இதில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் உணவில் அதிகபடியாக சிவப்பு மிளகாய் சேர்த்து கொண்டால் உள்ளுறுப்புகளில் வீக்கம் ஏற்படுவதோடு, அல்சர் மற்றும் வயிற்றில் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
பச்சை மிளகாயின் நன்மைகள்:
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: பச்சை மிளகாயில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால், மலச்சிக்கலை தவிர்க்கிறது. ஜீரணத்திற்கு தேவையான அளவு உமிழ்நீர் சுரக்கச் செய்கிறது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது: நீரிழிவு நோய்க்கு பச்சை மிளகாய் சிறந்த மருந்து. இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதோடு ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது: பச்சை மிளகாயில் கலோரிகளே இல்லை. மேலும் இதனை உணவில் சேர்த்து கொள்வதால், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பச்சை மிளகாயில் பீட்டா கெரோட்டின் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இருதய ஆரோக்கியத்தையும் சீராக வைக்கிறது. கொலஸ்டரால் மற்றும் இரத்த அடைப்புகளை தடுக்கிறது.
புற்றுநோயில் இருந்து காக்கிறது: பச்சை மிளகாயில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் வாய், நுரையீரல், குடல், தொண்டை புற்று நோய் அபாயத்தில் இருந்து காக்கிறது.
பச்சை மிளகாயில் கலோரிகள் மிகவும் குறைவு.
சிவப்பு மிளகாயின் நன்மைகள்:
இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது: சிவப்பு மிளகாயில் அதிகபடியான பொட்டாஷியம் இருக்கிறது. இதனால் இரத்த குழாய்களை ஆரோக்கியமாக வைப்பதோடு இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்க உதவுகிறது.
வைட்டமின் சி நிறைந்தது: சிவப்பு மிளகாய் தூளில் வைட்டமின் சி இருக்கிறது. இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.
இரத்த குழாய் அடைப்பை சரிசெய்கிறது: மிளகாயில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் இரத்த குழாய் மற்றும் தமணிகளில் இருக்கும் அடைப்பை சரிசெய்கிறது.
பச்சை மிளகாயை காய வைத்து அரைக்கப்படுவது தான் மிளகாய் தூள்.
கொழுப்பை குறைக்கும்: சிவப்பு மிளகாய் தூளில் கேப்சசின் என்னும் பொருள் இருப்பதால் இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை குறைத்துவிடும். மேலும் நம்மை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள கூடிய ஹார்மோன்களை சுரக்க செய்வதோடு தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
No comments:
Post a Comment