Showing posts with label மருத்துவ குறிப்பு. Show all posts
Showing posts with label மருத்துவ குறிப்பு. Show all posts

Monday, May 18, 2020

சூப்களின் மருத்துவ பலன்கள்




நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.

ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

துரித உணவுகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் என்றாலே சிலர் வெறுப்படைகின்றனர்.

அத்தகையர்கள் மிக எளிதாக சூப் வைத்து குடிக்கலாம், உணவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சூப் குடித்தால் நல்ல பசியை தூண்டிவிடும்.

அதுமட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

* 50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.

இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.

இதனை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய், வயிற்றுப்புண், மூட்டுவலி மற்றும் பக்கவாதம் குணமடையும்.

* பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வல்லாரை கீரையுடன் தேவையான காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம், இதேபோன்று பொன்னாங்கன்னி கீரையையும், முருங்கை கீரையையும் செய்து சாப்பிடலாம்.

இதன் மூலம் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் கண் சம்பந்தமான நோய்கள் சரியாகும், எலும்புகள் வலுப்பெறும்.

* இதேபோன்று துளசி அல்லது துளசி பொடியை நீர் சேர்த்து, தேவையான அளவு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.

இவ்வாறு குடித்தால் ஆஸ்துமா நோய் சரியாகும், சளி- இருமல் இருக்காது.

தினமும் கொண்டை கடலை சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா


கொண்டைக்கடலையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி, நகம் மற்றும்  உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் சத்து மிக முக்கியம். எனவே தினமும் 100 கிராம் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வரவது நல்லது.

கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல்  எடையினை குறைக்க நார்சத்து முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

முடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு புரதம் மிக மிக முக்கியம்.கொண்டைக்கடலையை புரதம், இரும்பு, ஜின்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்களின் முடி ஆரோக்கியமாக வளர உதவும். மேலும் முடி கொட்டுதலை தடுக்கும். உங்களின் முடி வேரிலிருந்து வலுவாக வளர மிகவும் பயனுள்ளதாக  அமைகின்றது.
 
கொண்டைக் கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம்  சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் உங்கள் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. எனவே உடல் உழைப்பு அதிகம்  உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.

கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் ஜீரண உறுப்புகள் மற்றும்  குடலின் ஆரோக்கியம் மேம்படும். 

கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும்.

Friday, May 15, 2020

மன உனைச்சலை தவிர்த்து வாழ்ந்தால் உங்கள் உடல் இளமையாக இருக்கும்



சிரிச்சீங்கன்னா உங்க ரத்த நாளங்கள் ரிலாக்ஸ் ஆகி அதிக ரத்தத்தை பாய்ச்சும்! கடுகடுத்தீங்கன்னா, எதிர்மறை நடக்கும். ரத்தம் குறைஞ்சு ஏக டென்ஷன்.

நல்லா மூச்சு எடுங்க

இது பிரணாயாமம் இல்லை. ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், எலுமிச்சை, மல்லிகை,  துளசி போன்ற வாசனைகள் நல்லா முகர்ந்து பாருங்க! லினாலூல்ய் என்ற ஒரு கலவை இதில் உள்ளது. அது படபடப்பை குறைக்கும் சக்தி கொண்டது.

சூயிங்கம்

பசக் பசக் என்று சத்தம் போட்டு மற்றவர்களை எரிச்சல்படுத்தாமல், அமைதியாக மெல்லுங்கள். ‘சூயிங்கம், படபடப்பை குறைக்கும்’ என ஒரு சூயிங்கம் நிறுவனத்தார் ஆய்வு செய்து கூறியுள்ளனர்.

பிளாக் டீ 

பால் இல்லாமல் சக்கரை இல்லாமல் வெறும் தேநீரை குடித்து வர, நோய் டென்ஷன். உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறையும்!

‘சீ க்யுகாங்’ என்ற சீன பயிற்சி
சுவரை பார்த்தபடி நில்லுங்கள். தலையை இடது புறமாக திருப்பும் போது மூச்சை இழுங்கள். தலையை மீண்டும் நடுநிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை விடுங்கள். இப்படியே லெஃப்ட், ரைட் செய்து வர, சில நிமிடங்களில் நோ டென்ஷன்.

Thursday, May 14, 2020

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது





வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்திற்குள் உங்கள் உடலில் என்ன மாற்றங்கள். நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது.

டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.


ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது





நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸ்களோடு போராடி உடலைப் பாதுகாக்கும்.வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை, மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் 2 தக்காளிப் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


நச்சுகள், குடற் பூச்சிகள் போன்றவை அழிகின்றன.2 கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி அல்லது குழம்பு வைத்து உணவில் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.சுவாசகோளாறை சரிசெய்வதில் துளசி முக்கிய பங்காற்றுகிறது. எனவே, துளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம். 


இஞ்சியுடன் துளசியை சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.அன்னாசி பூ ரத்தத்தில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமை உள்ளது. எனவே, இந்த பூவை பொடியாக்கி தேநீருடன் கலந்து தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவருவது நல்லது.
எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றுடன் இஞ்சி சிறிது சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இஞ்சியில் உள்ள வேதிப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த சாறை உணவிற்கு பின் எடுக்க வேண்டும்.




ஒமேகா 3 அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வால்ட் நட் மற்றும் மீன்களில் மற்றும் அதிக அளவு ஒமேகா 3 அமிலம் காணப்படுகிறது. மீன் சமைக்கும் போது அதில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.தினமும் உணவில் 2 கிராம் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதில் உள்ள உயிர் வேதியியல் சத்துகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சர்க்கரைவள்ளி கிழங்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.


சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி மற்றும் இரும்புச்சத்துகள் உள்ளன.முருங்கைக் கீரையில் உள்ள சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.பப்பாளி : பப்பாளியும் வைட்டமின் C சத்துக்கு சிறந்த பழம். இது செரிமானத்தை எளிதாகத் தூண்டி தேவையான சத்துக்களை அளிக்கவல்லது. பொட்டாசியம், வைட்டமின் B போன்ற சத்துக்களும் இருப்பது கூடுதல் நன்மையளிக்கும்

Wednesday, May 13, 2020

பொதுவாக வாதம் முடக்குவாதம் வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது




முடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் தோட்டம் மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கொடி வகையைச் சேர்ந்தது. 

நகரத்தில் கீரை விற்பவர்களிடம் இந்த முடக்கத்தான் கீரை கிடைக்கும்.மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. 

ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும்.பிரச்னையைப் பொறுத்து சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இப்படிச் சாப்பிடும்போது சிலருக்கு சில நேரங்களில் தாராளமாக மலம் போகலாம். பயப்படத் தேவையில்லை. அதிகமானால் எலுமிச்சை சாறு குடிக்கலாம்; மலம் போவது நின்றுவிடும். 

இதேபோல் கை, கால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும்.மேற்சொன்ன பிரச்னை உள்ளவர்கள் காலை உணவான தோசையுடன் இந்த முடக்கத்தானை சேர்த்துக்கொள்ளலாம். 

அதாவது தோசை மாவுடன், அரைத்து வைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும். இதை அவ்வப்போது செய்து வரலாம். வாதம், வாயுத்தொல்லை உள்ளவர்கள்தான் என்றில்லாமல் எல்லோருமே இந்த முடக்கத்தான் தோசையைச் சாப்பிடலாம். காரக்குழம்பு, சாம்பார், ரசம், சூப் என பலவிதங்களிலும் முடக்கத்தான் கீரையைச் சமைத்து உண்ணலாம்.

இன்றைய அவசர உலகில் ஏதேதோ உணவுகளை உண்பதால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஏராளமாக உள்ளனர். இதற்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் நிவாரணம் கிடைக்காத நிலையில், பக்கவிளைவுகளே ஏற்படுகின்றன. அவர்கள் முடக்கத்தான் ரசம் வைத்து அருந்துவதால், தாராளமாக மலம் போகும். 

ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையுடன், கால் ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், தக்காளி ஒன்று, வெள்ளைப்பூண்டு 5 பல் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து பொறுக்கும் சூட்டில் அருந்தினால், மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக, இரவு வேளையில் இதை செய்தால் காலையில் தாராளமாக மலம் போகும்.

உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்னென்ன என்பதை இனி அறிவோம்





உடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்

புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்ன என்பதை அறியலாம்.

உடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்
இன்று வருகின்ற நோய்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்மை அறியாமலே உள்ளுக்குள் பயம் வருகின்றது. சில வகையான நோய்கள் அறிகுறிகளை முன்கூட்டியே காட்டி விடும். ஆனால், சில வகையான கொடூரமான நோய்கள் உங்கள் உடலுக்குள் இருந்து கொண்டே இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்.

இந்த வகையான நோய்கள் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக நோய்களில் புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். 

நாம் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு புற்றுநோய்கள் ஏராளமான வகையில் உள்ளது. பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். பிறகு உடல் முழுக்க இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

கணைய புற்றுநோய்

கணையங்கள் மிக முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது. உங்களின் கணையம் பாதிக்கப்பட்டால் செரிமான கோளாறு, ஹார்மோன்கள் குறைபாடு, சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்றவை ஏற்படும். கணையத்தில் புற்றுநோய் வந்தால் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்பசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் கடைசி கட்டத்தில் ஏற்படும். ஆனால், இதனை பலர் தொப்பை விழுந்துள்ளதாக சாதாரணமாக கருதுகின்றனர்.

ப்ரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களை அதிகமாக தக்க கூடிய புற்றுநோய் வகைகளில் இது தான் முதலிடத்தில் உள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் தென்படுவது மிக கடினம். விந்தணுக்களுடன் சீழ் போன்று வருதல், பிறப்புறுப்பு வீங்குதல் போன்ற அறிகுறிகளை இவை இறுதியாக உணர்த்தும். அத்துடன் சிறுநீருடன் ரத்தமும் கலந்து வர கூடும்.

சிறுநீரக புற்றுநோய்

மிக கடினமாக கண்டறியப்படுகின்ற புற்றநோய் வகையை சார்ந்தது இது. ஆரம்ப நிலையில் எந்த ஒரு அறிகுறியையும் இது தருவதில்லை. ஆனால், இறுதி தருவாயில் பின் முதுகு வலி, திடீரென்று உடல் எடை குறைதல், சிறுநீரகத்தில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட கூடும். இதை முதல் நிலையில் அறிவது மிக கடினமாகும்.

நுரையீரல் புற்றுநோய்

புகை பிடிப்பதாலே பாதிக்கும் மேற்பட்டோர்க்கு இந்த புற்றுநோய் வருகிறது. இதன் அறிகுறிகளும் பல நாட்கள் உடலில் ஊறியே பின்னரே தெரிய வரும். ஆரம்ப நிலையில் X-ray எடுத்து பார்த்தல் கூட இந்த புற்றுநோய் இருப்பதாக கண்டறிய முடியாதாம். அதிக இரும்பல், நீண்ட நாள் காய்ச்சல், மூச்சு திணறல் ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.

கருப்பை புற்றுநோய்

ஆண்களை போலவே பெண்களை பிரத்தியேகமாக தாக்க கூடிய கொடூரமான புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகளை கண்டறிவது மிக கடினம். இவை பெண்களின் பிறப்புறுப்புகளில் உண்டாக கூடும். மலத்தில் ரத்தம் வருதல், குடலில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் பின்னாளில் தென்பட கூடும்.

சார்க்கோமா

தசைகளிலும் எலும்புகளிலும் உருவாக கூடிய புற்றுநோய் இது. குறிப்பாக கொழுப்புகளிலும், மெல்லிய திசுக்களிலும், நரம்புகளிலும், ரத்த நாளங்களிலும் இவை ஊடுருவி இருக்கும். மேலும், தோலில் அடிப்பகுதியில் இவை உருவாகவும் கூடும். இவை எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் வரலாம். இதன் அறிகுறியை ஆரம்பத்தில் அறிய இயலாது.

கல்லீரல் புற்றுநோய்

மிக மோசமான நோய்களில் இதுவும் அடங்கும். கல்லீரலில் புற்றுநோய் உண்டாக்கினால் கண்டறிவது மிக கடினமாகும். முதலில் கல்லீரல் வீங்க தொடங்கி, புற்றுநோய் செல்கள் கல்லீரல் முழுவதும் பரவும். சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் வர கூடும்.

விறைப்பை புற்றுநோய்

20 முதல் 45 வயதுடைய ஆண்களுக்கு இந்த புற்றுநோய் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. விந்தணுக்களை உருவாகும் போது அதனுடனே புற்றுநோய் கிருமிகளும் உருவாகி உயிரை எடுத்து விடும். இதனை முதல் நிலையில் அறிவது மிக கடினம்.

மூளை புற்றுநோய்

மூளை மற்றும் தண்டு வடத்தில் இந்த புற்றுநோய் செல்கள் உருவாக கூடும். இவை இறுதி நிலையில் தான் தனது அறிகுறியை வெளிப்படுத்தும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். அடிக்கடி தலைவலி, பேசுவதில் தடுமாற்றம், மண்டை பகுதியில் புதுவித அறிகுறி இருந்தால் மூளை புற்றுநோய் என்று அர்த்தம்.

நீரழிவு நோயில் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா





1. டைப் 1 நீரழிவு நோய்: இது உடலில் இன்சுலின் சுரக்காமல் போனால், அல்லது மிகக் குறைந்த அளவு மட்டுமே இன்சுலின் சுரந்தால் ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படக் கூடும். 

இது இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தின் அணுக்களை சேதமடையச் செய்யும். இந்த நோய் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை  பாதிக்கின்றது. இரத்தத்தில் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ள, தினமும் இன்சுலின் ஊசி பொட்டுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.
 
2. டைப் 2 நீரழிவு நோய்: இந்த வகையில் உடலில் இன்சுலின் பயன்படுத்தப்படாது அல்லது, இன்சுலின் உற்பத்தியாகாது. சர்க்கரை அணுக்களுக்குள் செல்ல முடியவில்லை என்றால், அணுக்களில் அதிக அளவு க்ளுகோஸ் உள்ளது அதனால் அணுக்கள் சக்தியை பயன்படுத்த முடியாது என்கின்ற நிலை ஏற்படுகின்றது. 
 
இது 35 வயதிற்கு மேலானவர்களுக்கு அதிக அளவு ஏற்படுகின்றது. 9௦% நீரழிவு நோய் இருப்பவர்கள், இந்த வகையாலே பாதிக்கப்படுகின்றனர். சரியான உணவு முறை மற்றும் சீரான உடல் எடையை தக்க வைத்துக் கொண்டால், இதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
 
3. கற்பகால நீரழிவு நோய்: இது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும். இது குழந்தை மற்றும் தாய், இருவரையும் பாதிக்கும். எனினும், பெரும்பாலான பெண்களுக்கு இந்த நீரழிவு நோய், குழந்தை பிறந்தவுடன் குணமாகிவிடும்.
 
4. பிரிடியாபெடீஸ்: இது காலை வெறும் வயிற்றிலோ அல்லது உணவு அருந்திய பின்னரோ உடலில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறிக்கும். இந்த நேரங்களில் வழக்கத்தை விட உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இந்த நோயின் தாக்கம் இருந்தால், வெகு விரைவாகவே பல பாதிப்புகளை  சந்திக்க நேரிடும்.
 
நீரழிவு நோயின் அறிகுறிகள்: ஒரு சில அறிகுறிகளை வைத்து இந்த நோயை கண்டு பிடித்து விடலாம். பலருக்கும் உடலில் நீரழிவு நோய் இருக்கின்ற அறிகுறி தெரியாமல், ஆரம்ப காலத்தில் அலட்சியமாக விட்டு விடுகின்றனர். ஆனால், இது உண்மையான பாதிப்பை ஏற்படுத்தும் போது தான் விழிப்புணர்வு ஏற்படுகின்றது. 

தினமும் ஆரஞ்சுபழம் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்




ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய  காரணியாகும்.

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ  கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும்.
 
ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.
 
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
 
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

Tuesday, May 12, 2020

நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி இரண்டுமே வித்தியாசமானது என்பது அதைத் தடுப்பது எப்படி



சிலருக்கு வயிறு முட்ட சாப்பிட்டாலே இந்த பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்து விடும். நெஞ்சு கப கபவென எரிவது, எச்சிலை கூட விழுங்க முடியாமல் போய் விடும். இதற்கு நெஞ்செரிச்சல் என்று பெயர். சிலருக்கு சாப்பிட்ட உணவு தொண்டை பகுதி வரை மேலே ஏறி கீழே இறங்கும். இதற்கு எதுக்களித்தல் அல்லது அமிலத்தன்மை என்று பெயர்.

பொதுவாக இந்த இரண்டையும் மக்கள் ஒன்று என்று நினைப்பார்கள். ஆனால் இந்த இரண்டு செயலுக்கும் இடையே சற்று வித்தியாசம் காணப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த இரண்டு நிலைகளும் உயிருக்கு ஆபத்தானது இல்லை என்றால் கூட சீக்கிரமே குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் குடல் பகுதியி்ல் புண்கள், அல்சர் இவற்றை ஏற்படுத்த வழிவகுத்துவிடும். எனவே இவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

அசிடிட்டி அல்லது எதுக்களித்தல்

நமது கீழ் உணவுக் குழாயில் வட்ட வடிவ தசை இருக்கும். இது உணவுக்குழாய்க்கும் வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும். இது ஒரு கேட் மாதிரி செயல்படும். உணவு வாயின் வழியே உணவுக்குழாய்க்குள் செல்லும் போது இந்த தசை திறந்து அதை வயிற்று பகுதிக்கு அனுப்பி வைக்கும். பிறகு இந்த தசை மூடி வயிற்றில் இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மேலே வருவதை தடுக்கும். இப்படித்தான் உணவு சீரணம் ஆகிறது. இந்த தசை பலவீனமாக இருந்தாலோ, ஓய்வில் இருந்தாலோ அல்லது இறுகவில்லை என்றாலோ வயிற்றில் இருக்கும் அமிலம் தொண்டை வரை எழும்பி கீழே வரும். இதைத்தான் அசிடிட்டி அல்லது எதுக்களித்தல் என்று கூறுகிறோம்.

அசிடிட்டி அறிகுறிகள்:

* இருமல்

* தொண்டை புண்

* தொண்டையில் ஒருவித கசப்பான தன்மை

* தொண்டைப்பகுதி எரிச்சல் போன்றவை ஏற்படும்.

நெஞ்செரிச்சல்

நமது வயிற்று சுவர்கள் இந்த செரிமான அமிலத்தை தாங்கும் அளவு அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் உணவுக் குழாய் மென்மையான பகுதி. அவற்றால் இந்த அமில வரப்பை தாங்க முடியாது. இதனால் எதுக்களித்தலால் மேலே எழுந்த அமிலம் உங்கள் நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுப் குழாய் பகுதியில் எரிச்சலை உண்டாக்கும். இந்த எரிச்சலைத் தான் நாம் நெஞ்செரிச்சல் என்கிறோம். ஆனால் எல்லா அமிலத்தன்மை எதுக்களிப்பும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தாது. இது ஒரு அசெளகரியத்தை உண்டாக்கும்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அமில ரிஃப்ளக்ஸ் உணவுக்குழாய் தசை பலவீனம் அடைவதால் அமிலம் மேலே எழும்புகிறது. இதன் அறிகுறியாக அந்த பகுதியில் எரிச்சல் ஏற்படுகிறது இது தான் நெஞ்செரிச்சல்.






நெஞ்செரிச்சலின் அறிகுறிகள்:

* அதிகமாக சாப்பிட்ட உடனே மல்லாக்க படுக்கும் போது நெஞ்செரிச்சல் உண்டாகும்.

* நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் மற்றும் வலி

* தொண்டை எரிச்சல் உண்டாகும்.

தடுக்க வழிகள்:

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலை தவிர்க்க வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் இதை குறைக்கலாம்.

* வயிறு முட்ட சாப்பிட்ட உடனே படுப்பதை தவிருங்கள். 2 மணிநேரம் கழித்து படுங்கள்.

* அதிகமாக சாப்பிடாதீர்கள். வயிறு நிறைந்த பிறகு சாப்பிடுவது உங்களுக்கு எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

* சாப்பிடும் போது உணவை முழுசு முழுசாக விழுங்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிடுங்கள்.

* காரசாரமான உணவுகள், அமில உணவுகள் சிட்ரஸ் உணவுகளை தவிருங்கள். இவை எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

* ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தை தவிருங்கள்.

* உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையை குறைக்க முற்படுங்கள்.

* தக்காளி மற்றும் வெங்காய ஜூஸ் குடிக்காதீர்கள்.

* பலருக்கு இரவில் எதுக்களித்தல் பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள். படுக்கும் போது உயரமான தலையணையில் தலையை வைத்து படுங்கள்.

* சுய மருந்து வேண்டாம்.

* அசிடிட்டி மற்றும் எதுக்களித்தல் பிரச்சனை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

முடிவு

உடற்பயிற்சி கூட உங்க வயிற்று செயல்பாட்டை அதிகரித்து அமிலம் மேல்நோக்கி வருவதை தடுக்கிறது. எனவே தகுந்த உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவுகள் மூலம் அமிலத் தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஓரங்கட்டலாம்.

ஆரோக்கியத்திற்கு பச்சை மிளகாயா சிவப்பு மிளகாயா மிளகாய் உணவிற்கு ருசியை தருவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியது




பச்சை மிளகாயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன.பச்சை மிளகாய் நீரிழிவு நோய்க்கு சிறந்த தீர்வு.மிளகாய் தூள் இரத்த நாளங்கள் மற்றும் செல்களை சீராக வைக்கிறது.

தென்னிந்திய உணவுகளுக்கு காரத்துடன் சேர்ந்த ருசியை தருவது மிளகாய்.  மிளகாய் சேர்க்காத உணவு வகைகளே இருந்திட முடியாது.  பொதுவாகவே நம் தென்னிந்திய உணவுகளில் மசாலா பொருட்களை சற்றே தூக்கலாக சேர்ப்பது வழக்கம்.  மிளகாய் உணவிற்கு ருசியை தருவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியது.  மிளகாயில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை அடங்கியிருக்கிறது.  நாம் பயன்படுத்தக்கூடிய மிளகாய் இரண்டே வகைதான்.  

ஒன்று பச்சை மிளகாய், மற்றொன்று சிவப்பு மிளகாய்.  இந்த சிவப்பு மிளகாய் பெரும்பாலும் பொடியாகவே பயன்படுத்தப்படுகிறது.  ஆரோக்கியத்தை பொருத்தமட்டில் உடலுக்கு நல்லது பச்சை மிளகாயா அல்லது சிவப்பு மிளகாயா என்பதை பார்ப்போம். முதலில் சிவப்பு மிளகாய்க்கும் பச்சை மிளகாய்க்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்வோம்.  

பச்சை மிளகாயில் நீர்சத்து இருப்பதோடு அதில் கலோரிகள் முற்றிலுமாக இருப்பதில்லை.  பச்சை மிளகாயை காயவைத்தால் கிடைப்பதே சிவப்பு மிளகாய்.  அரைத்து பொடியாக பயன்படுத்தக்கூடிய இதில் செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுகின்றன.  மேலும் உணவில் அதிகபடியாக சிவப்பு மிளகாய் சேர்த்து கொண்டால் உள்ளுறுப்புகளில் வீக்கம் ஏற்படுவதோடு, அல்சர் மற்றும் வயிற்றில் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.  உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 

பச்சை மிளகாயின் நன்மைகள்:

ஜீரண சக்தியை அதிகரிக்கிறது:  பச்சை மிளகாயில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால், மலச்சிக்கலை தவிர்க்கிறது.  ஜீரணத்திற்கு தேவையான அளவு உமிழ்நீர் சுரக்கச் செய்கிறது. 

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது: நீரிழிவு நோய்க்கு பச்சை மிளகாய் சிறந்த மருந்து.  இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதோடு ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. 

உடல் எடையை குறைக்க உதவுகிறது: பச்சை மிளகாயில் கலோரிகளே இல்லை.  மேலும் இதனை உணவில் சேர்த்து கொள்வதால், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:  பச்சை மிளகாயில் பீட்டா கெரோட்டின் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு இருதய ஆரோக்கியத்தையும் சீராக வைக்கிறது.  கொலஸ்டரால் மற்றும் இரத்த அடைப்புகளை தடுக்கிறது. 

புற்றுநோயில் இருந்து காக்கிறது:  பச்சை மிளகாயில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் வாய், நுரையீரல், குடல், தொண்டை புற்று நோய் அபாயத்தில் இருந்து காக்கிறது. 


பச்சை மிளகாயில் கலோரிகள் மிகவும் குறைவு.

சிவப்பு மிளகாயின் நன்மைகள்:

இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது:  சிவப்பு மிளகாயில் அதிகபடியான பொட்டாஷியம் இருக்கிறது.  இதனால் இரத்த குழாய்களை ஆரோக்கியமாக வைப்பதோடு இரத்த அழுத்தத்தையும் சீராக வைக்க உதவுகிறது. 

வைட்டமின் சி நிறைந்தது:  சிவப்பு மிளகாய் தூளில் வைட்டமின் சி இருக்கிறது.  இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். 

இரத்த குழாய் அடைப்பை சரிசெய்கிறது:  மிளகாயில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் இரத்த குழாய் மற்றும் தமணிகளில் இருக்கும் அடைப்பை சரிசெய்கிறது. 


பச்சை மிளகாயை காய வைத்து அரைக்கப்படுவது தான் மிளகாய் தூள்.

கொழுப்பை குறைக்கும்:  சிவப்பு மிளகாய் தூளில் கேப்சசின் என்னும் பொருள் இருப்பதால் இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை குறைத்துவிடும்.  மேலும் நம்மை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள கூடிய ஹார்மோன்களை சுரக்க செய்வதோடு தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை கொடுப்பது நல்லதா கெட்டதா அவசியம் படியுங்கள்

சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயணங்களால் ஆனது.பிஸ்கட்டுகளின் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைக்கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.

சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

எப்போதும் குழந்தைகளுக்கு இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார்செய்த உணவுகளை சாப்பிடக் கொடுப்பதே ஆரோக்கியத்தை கொடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.