Showing posts with label அழகு குறிப்பு. Show all posts
Showing posts with label அழகு குறிப்பு. Show all posts

Saturday, May 30, 2020

சருமத்தை பராமரிப்பதில் அற்புதமாக செயல்படும் கற்றாழை ஜெல்

கற்றாழையை பயன்படுத்தக்கூடிய இந்த வழிகளை அறிந்து கொண்டு, அதை உங்கள் சரும பராமரிப்பிற்கு ஏற்ற முறையில் சேர்த்துக்கொண்டு, மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறலாம்.

உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. 
 
ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர்  கழுவிக்கொள்ளவும்.
 
எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில்  கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.
 
இரண்டு கற்றாழை இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும்  கழுவிக்கொள்ளவும்.

Monday, May 18, 2020

எத்தனை முறை முகம் கழுவலாம்

சிலர் அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருப்பர். இப்படி அடிக்கடி முகம் கழுவுவதால், சருமம் தன்னுடைய இயற்கை எண்ணெய் தன்மையை இழக்கிறது. 
வறண்ட சருமம் உள்ளவர்கள் நாளொன்றுக்கு இரண்டு முறையும், எண்ணெய் பசையுடன் கூடிய சருமம் உள்ளவர்கள் நான்கைந்து முறையும், நார்மல் சருமம் உள்ளவர்கள் மூன்று முறையும் முகம் கழுவலாம்.

Friday, May 15, 2020

தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.

நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.

சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.

ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.
இமைகளின் மேல் இந்த கலவையைப்பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்றி விடும்.

இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

தக்காளி சாறு- அரை டீஸ்பூன், 
தேன்அரை டீஸ்பூன், 
சமையல் சோடா- ஒரு சிட்டிகை. 

இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையமா அது எங்கே என்பார்கள்.

கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் பிளீஸ்… உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. 

இந்த தக்காளி பேஸ்ட்!

உருளைக்கிழங்கு துருவல் சாறு- ஒரு டீஸ்பூன், 
தக்காளி விழுது- அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாக காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்க.

தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை எடுங்கள்.

முதலில் முகத்தில் ஆலிவ் எண்ணையை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் ஒருமுறை இப்படி செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும்.

Thursday, May 14, 2020

முகத்தில் உள்ள கருமையான படலத்தை ரோஸ் வாட்டரைக் கொண்டு நீக்குவது எப்படி

பழங்காலம் முதலாக ரோஸ் வாட்டர் அழகு பராமரிப்பு பொருளாகப் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது டோனராக இருக்கட்டும் அல்லது ஃபேஸ் பேக்கில் ஆகட்டும், அனைத்திலும் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 

தற்போது சரும நிறத்தை அதிகரிக்க கடைகளில் என்ன தான் பல க்ரீம்கள் விற்கப்பட்டாலும், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடுவதால், ஏராளமானோர் இயற்கை வழிகளை நாட ஆரம்பித்துவிட்டனர். இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தின் நிறத்தை எப்படி அதிகரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள். 

முல்தானி மெட்டி

 முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து, சருமம் பொலிவோடும் வெள்ளையாகவும் காட்சியளிக்கும். 

கடலை மாவு 

கடலை மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதைக் காணலாம். 

தக்காளி சாறு 

கோடையில் சருமத்தின் நிறம் எளிதில் கருமையடையும். இதனைத் தடுக்க, வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், தக்காளி சாற்றில் ரோஸ் வாட்டரைக் கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும், நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் கோடையில் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம். 

உருளைக்கிழங்கு 

வாரத்திற்கு ஒருமுறை உருளைக்கிழங்கை அரைத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் மற்றும் கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும நிறம் அதிகரிக்கும். 

சோம்பு 

முகப்பரு மற்றும் அதன் தழும்புகளுடன் வெளியே செல்வது என்பது கஷ்டமான ஒன்றாக இருக்கும். ஆனால் ரோஸ் வாட்டர் முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். அதிலும் ரோஸ் வாட்டரில் ஊற வைத்து சோம்பை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, நல்ல பலனைக் காணலாம். தயிர் இரவில் படுக்கும் முன் ரோஜாப்பூ இதழ்களை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொண்டு, பின் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து, தயிர் மற்றும் வடிகட்டி வைத்துள்ள நீருடன் கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி உலர வைத்து கழுவ, சருமம் மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். 

சந்தனப் பொடி 

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மறைவதோடு, வெள்ளையான சருமத்தையும் பெறலாம். முட்டை மற்றும் தேன் முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, சருமத்தில் உள்ள முதுமை கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும். 

மாங்காய் 

மாங்காயை அரைத்து ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை அழகாக வெளிக்காட்டும். ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் காலையிலும், இரவிலும் முகத்தை துடைத்து எடுப்பதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும்.

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான அழகுகுறிப்பு

வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். 

இப்படி தினமும் 2,முறை செய்து வந்தால் இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம். 

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும். மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின் கழுவவேண்டும். இப்படி செய்துவந்தால் சூரியக்கதிர்களால் கருமையான சருமம் பொலிவோடு மின்னும்.

Wednesday, May 13, 2020

எலுமிச்சை பழத்தில் ஒளிந்திருக்கும் பல அதிசயங்களையும் அது அழகை மேம்படுத்த உடம்பிற்கும் சருமத்திற்கும் எப்படி பயன்படுகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சை பழத்தை சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது?

இளமையுடன் இருக்க… 

உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம். 
எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்து போராடும்.

சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ் பேக் வேண்டுமா? 

அப்படியெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும் பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில் கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள்.

எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க…

எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும்.

சருமம் புத்துணர்வும், மென்மையும் அடைய…

எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்றவும் செய்யும்.

மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம். அழகிய இதழ்கள் எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம்.

அக்குள்களைப் பராமரிக்க…

நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே கிளம்புகிறீர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசுவதையும் பின்னர் தான் உணர்ந்தீர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எனவே எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம்.

விளக்கெண்ணெய்யை தினமும் புருவங்களில் பயன்படுத்தினால் அடர்த்தியான கருமையான புருவங்கள் வளரும்

கற்றாழை எளிதில் கிடைப்பதால் பயன்படுத்த மாட்டீர்கள். இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது. 

சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு இந்தப்  பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.
 
வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள்.  அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும். இதில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை  இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.
 
 விளக்கெண்ணெய்யில், புரதச்சத்து,  ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. 
 
ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால், உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை  புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள். 
 
முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை  ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும்  குறைகிறது. 
 
வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளதால் புருவம் நன்றாக வளரும். மயிர்கால்களை நன்றாக உறுதியாக்குகிறது. வெங்காயத்தை தோள் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.
 
8. தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடிக்காலில் இன்பெக்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.  வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம்.
 
தினமும், புருவத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதுவும் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கிரீம், லோஷன் போன்ற ரசாயனங்களை தவிருங்கள். புருவம் வளருவதை  இது பாதிக்கும். பயோட்டின் என்ற வைட்டமின் புருவம் வளர ஏதுவான சத்து ஆகும்.

Tuesday, May 12, 2020

சூப்பர் டிப்ஸ் குதிகால் வெடிப்புக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டுமா

குதிகால் வெடிப்பு, சேற்றுப்புண், விரலிடுக்கில் பூஞ்சை தொற்று எல்லாமே கிருமிகளால் வரக்கூடியதே.

குதிகால் வெடிப்பு வரும் போது ஆரம்பத்திலேயே அதை சரிசெய்ய வேண்டும் இல்லையெனில் அவை அதிகமாகி ஆரோக்கியத்தையும் குலைத்துவிடும்.

அதற்கு முதலில் பாதங்களிலிருந்து கிருமிகளை அகற்ற வேண்டும். அதற்கு வேப்பிலை பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் வேப்பிலையை வைத்து எப்படி குதிகால் வெடிப்பை போக்கலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
வேப்பிலை- 3 கைப்பிடி அளவு
தண்ணீர் – 2 லிட்டர்
ஸ்க்ரப் பிரஷ்
செய்முறை
தண்ணீரை கொதிக்க வைத்து வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

வேப்பிலையின் எசென்ஸ் முழுவதும் நீரில் இறங்கி இருக்கும். அதை அப்படியே இறக்கி சூட்டை ஆறவிடவும்.

மிதமான சூட்டில் கால் பொறுக்கும் சூட்டில் இருந்ததும் அகலமான பேஷனில் ஊற்றி கால்களை அதில் நனைத்தபடி வைக்கவும்.

10 நிமிடங்கள் குறையாமல் கால்கள் வேப்பிலை நீரில் இருக்க வேண்டும். அப்போது பொறுமையாக ஸ்க்ரப் பிரஷ் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்த்து எடுக்கவும்.

10 லிருந்து 20 நிமிடங்கள் வரை இரண்டு கால்களையும் பொறுமையாக தேய்த்து எடுத்து பிறகு மெல்லிய சுத்தமான துணியில் பாதங்களை துடைத்து இலேசாக ஆலிவ் ஆயில் போட வேண்டும்.

இந்த பராமரிப்பை காலை நேரம் தவிர்த்து மாலை அல்லது ஓய்வாக இருக்கும் நேரங்களில் செய்ய வேண்டும்.

கறுப்பான பெண்களுக்கு மட்டும்

கருப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கருத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை. அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். 

பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி கருப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது. அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம். ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும். கருப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம். உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். 

அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம். ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.