Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts

Monday, May 18, 2020

இதை முயன்று பாருங்கள் சூப்பரான நண்டு கறி செய்வது எப்படி



என்னென்ன தேவை

சுத்தம் செய்யப்பட்ட கடல் நண்டு ½ கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
இஞ்சிப்பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு
கடலை எண்ணெய் 1 குழிக்கரண்டி
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை

எப்படிச் செய்வது:

வட சட்டியை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்றி முதலில் இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு அத்துடன் பச்சை மிளகாய்களை ஒடித்துப் போடவும்,பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்புச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறம் அடைந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக குழைவாக வெந்ததும் பொடிகளைப் போட்டு கிளறுங்கள்.

இப்போது உங்கள் ருசிக்கேற்றபடி உப்புச் சேர்த்து மறுபடியும் கிளறிவிட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுத் துண்டுகளை அள்ளிப்போட்டு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவைத்து வேக விடுங்கள்.

நண்டில் இருந்து வெளிப்படும் நீங்கள் ஊற்றிய நீரும் வற்றியதும் ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு சாப்பிடுங்கள்.

Friday, May 15, 2020

ஆப்பிள் லஸ்ஸி எப்படிச் செய்வது





தேவையான பொருட்கள் :

கிரீன் ஆப்பிள் – 2
தயிர் – 2 கப்
பால் – கால் கப்
தண்ணீர் – கால் கப்
தேன் – 2 ஸ்பூன்

செய்முறை :

• கிரீன் ஆப்பிளை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

• மிக்சியில் ஆப்பிள், தயிர், பால், தண்ணீர், தேன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

• அரைத்த லஸ்ஸியில் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்.

• வெயிலுக்கு இதம் தரும் இந்த லஸ்ஸி.

Thursday, May 14, 2020

சுவை மிகுந்த புளியோதரை செய்முறை





தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் - 2 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:


நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் - 2


வறுத்து பொடிக்க வேண்டியவை:


மிளகாய் வத்தல் - 2
தனியா - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
எள்ளு - 1 மேஜைக்கரண்டி


செய்முறை:

அடுப்பில் வெறும் கடாயில் மிளகாய் வத்தல், தனியா விதை, வெந்தயம், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் எள்ளு சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப்  செய்து விடவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

புளியை 200 மில்லி தண்ணீரில் உறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு  தாளிக்கவும்.

கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின்னர் பெருங்காயத்தூள் சேர்க்கவும். புளித் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

புளிக் காய்ச்சல் கெட்டியானதும் உப்பு மற்றும் வறுத்து பொடித்த  தூளை சேர்த்து கிளறி அடுப்பை ஆப் பண்ணவும். ஆற வைத்துள்ள சாதத்தில் தேவையான அளவு புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது  சேர்த்துக் கொள்ளவும். சுவையான புளி சாதம் தயார்.

நாட்டுக்கோழி குழம்பு எளிய முறையில் தயாரிக்கும் முறை



தேவையான பொருள்கள்:

நாட்டுக்கோழி - 1/2 கிலோ 
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தயிர்  - 2 மேஜைக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
கொத்தமல்லித்தழை - சிறிது 
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
வறுத்து திரிக்க -
மிளகாய் வத்தல் -5
கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
மிளகு - 1 மேஜைக்கரண்டி 
வறுத்து அரைக்க -
தேங்காய் துருவல் - 100 கிராம்

              
தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
பட்டை - 1 இன்ச் அளவு 
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு





செய்முறை


முதலில் கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து விட்டு  சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
   
தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை   வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். 
                       
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், திரித்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை  போகும் வரை கொதிக்க விடவும்.                                                               

மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.      

Wednesday, May 13, 2020

காரமான தக்காளி மீன் குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை




தேவையான பொருட்கள்:

மீன் – 6-7 துண்டுகள்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 6 (அரைத்தது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 6-8 பற்கள்

கறிவேப்பிலை – சிறிது

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்



செய்முறை: 

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகலமான மற்றும் தட்டையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுத்து, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து, அதில் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

பின் அதின் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும். மீனானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காரமான தக்காளி மீன் குழம்பு ரெடி!

முட்டை பிரியாணி ரெசிபி செய்வது எப்படி




தேவையான பொருட்கள்


4 வேகவைத்த முட்டை
இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கியது
ஒரு சிறிய தக்காளி நறுக்கியது
கொத்தமல்லி தழை 1 தேக்கரண்டி
புதினா தழை ஒரு தேக்கரண்டி நறுக்கியது
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
தாவர எண்ணெய் 1.5 டேபிள் ஸ்பூன்
1 டேபிள் ஸ்பூன் தயிர்
பச்சை மிளகாய் 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டேபிள் ஸ்பூன்
½ டீ ஸ்பூன் மிளகாய் தூள்
½ தேக்கரண்டி மல்லி தூள்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
உப்பு சுவைகேற்ப‌
நான்கு கிராம்பு
பட்டை
2 ஏலக்காய்
¼ அளவு சீரகம்
4 மிளகு
பாசுமதி அரிசி
3 கிராம்பு
4 ஏலக்காய்
பட்டை
மராட்டி மொக்கு
இரண்டு பிரின்ஜி இலைகள்
5 புதினா இலைகள்
½ தேக்கரண்டி எண்ணெய்
¾ தேக்கரண்டி உப்பு
தேவையான அளவு நீர்

வழிமுறைகள்:

* பாசுமதி அரிசியுடன் கிராம்பு, பிரின்ஜி இலைகள், கிராம்பு, ஏலக்காய், புதினா இலைகள், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொண்டு, இதை ஆற விடவும்.

* கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கிக் கொண்டு இதில் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தை தனியே வைத்துக் கொள்ளவும்.

* இந்த சூடான வெங்காயத்துடன், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள‌ வேண்டும், பின் இதில் முட்டை மற்றும் நறுக்கப்பட்ட தக்காளி சேர்த்து நன்கு இந்த கலவையை கலந்து கொள்ளவும்.

* இந்த கலவையுடன் மீதமுள்ள தயிர் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் வேக வைக்கவும், பின் இதில்  மீதமுள்ள எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* இப்போது பெரிய பாத்திரம் எடுத்து கொண்டு பிரியாணி தயார் செய்ய, அதில் எண்ணெயை தடவி கொண்டு அதன் மீது முட்டை கலவையை பரவலாக போடு அதன் மீது அரிசியை போடவும்.

* இப்போது நீங்கள் உங்கள் முட்டை பிரியாணி செய்முறை சஞ்சீவ் கபூர் செய்முறை போல தயாராகி விட்டது. எனவே இந்த சஞ்சீவ் கபூர் பாணியிலான முட்டை பிரியாணி செய்முறையை நன்கு அலங்கரித்து சூடாக பரிமாறலாம் நீங்கள்

சுவையான வெஜிடபிள் போண்டா செய்ய தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 1 கப்
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - ருசிக்கேற்ப
கலர் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உருளைக் கிழங்கு -  1
கேரட் - 1
பீன்ஸ் - 4
பட்டாணி - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.



செய்முறை:
 
கொத்தமல்லி, காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெள் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர்  வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும், மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள்.
 
காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து  நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள்.
 
பிறகு கடலை மாவுடன் சிறிது உப்பு ஆப்ப சோடா கலர் பவுடர் தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். 
 
எண்ணெய்யைக் காயவைத்து காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள். சூப்பரான வெஜிடபிள்  போண்டா தயார்.

Tuesday, May 12, 2020

முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக் எப்படிச் செய்வது





தேவையான பொருள்கள்...


கன்டென்ஸ்டு மில்க் – 1 டின்,
சூடான பால் – 1/2 கப்,
வெண்ணெய் – 100 கிராம்,
சர்க்கரை – 60 கிராம்,
வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்,
மைதா – 250 கிராம்,
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,
சமையல் சோடா – 1 டீஸ்பூன்,
கோகோ – 4 டீஸ்பூன்.

அலங்கரிக்க…

ஃப்ரெஷ் க்ரீம் – 1/2 கிலோ,
சாக்லெட் பார் – 50 கிராம்,
செர்ரி பழம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெண்ணெய், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நுரைக்க அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடர், கோகோ ஆகியவற்றைச் சேர்த்து சலித்துக் கொள்ளவும். 

அடித்த வெண்ணெய்-சர்க்கரை கலவையுடன் மைதா, பேக்கிங் பவுடர், கோகோ கலவையைச் சேர்க்கவும். சூடான பாலையும் ஊற்றி தோசை மாவு பதத்துக்குக் கலந்து, ஒரு பேக்கிங் டிரேயில் வைத்து 180°C உஷ்ணத்தில் பேக் செய்யவும். பிறகு சாக்லெட் கேக்கை வெளியே எடுத்து வைத்து ஆற வைக்கவும்.

ஃப்ரெஷ் க்ரீமை நன்றாக நுரைக்க அடிக்கவும். இப்போது சாக்லெட் கேக்கை கத்தியால் ஸ்லைஸ் செய்யவும். அடித்த ஃப்ரெஷ் க்ரீமில் சிறிதளவு எடுத்து கேக் மேல் தடவவும். பின் சாக்லெட் பாரைத் துருவவும். அதன் மேல் இன்னொரு கேக் ஸ்லைஸைப் பரத்தவும். 

மீண்டும் க்ரீம் தடவி சாக்லேட் பாரைத் துருவவும். இப்படி மூன்று முறை செய்தபின் கடைசியில் நான்குபுறமும் க்ரீம் தடவி சாக்லெட் துருவலைத் தூவி, பொடியாக நறுக்கிய செர்ரி பழங்களையும் தூவி அலங்கரித்து சுமார் 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

முட்டையின் மஞ்சள் கருவை 6 விதமான சமையலுக்குப் பயன்படுத்தி அசத்துங்கள்



நம்மில் பலர் உடல் எடை காரணமாக முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்கிவைத்து விடுவார்கள். காரணம் மஞ்சள் கருவில் அதிகமாக இருக்கும் கொழுப்புதான். அது ரத்தத்தில் கொழுப்பை சேர்த்து பிரச்னையை தரும் என்பதால் பல ஊட்டச்சத்து நிபுணர்கள்கூட அதையே சிபாரிசு செய்கின்றனர். காலை உணவாக முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டுமே சாப்பிடுவதால் மஞ்சள் கரு பயன்படாமல் இருக்கும். அதைக் குப்பையில் கொட்டவும் முடியாமல் சிரமமாக இருக்கும். மஞ்சள் கருவை சாப்பிடுபவரா நீங்கள். வைட்டமின் A, D மற்றும் கால்சியம் மற்று இரும்புச்சத்து நிறைந்த மஞ்சள் கருவை இப்படியும் பயன்படுத்தலாம்....
1. மயோனைஸ் 

மயோனைஸ் செய்வதற்க்கு ஒரு முக்கியப் பொருளாக இருப்பது மஞ்சள் கரு. மயோனஸை நாம் கிரில் சிக்கன், சாண்விச், பர்கர் என பல உணவுகலோடு சேர்த்து சாப்பிட விரும்பிகிறோம். மீதமிருக்கும் மஞ்சள் கருவை சேகரித்து வீட்டிலேயே சுவையான ஆரோக்கியமான மயோனைஸை செய்து சாப்பிடலாம்.


2. பாஸ்தா சாஸ் மற்றும் சூப்


நீங்கள் வைத்த கிரேவி தண்ணியாக இருக்கிறதா? கவலை வேண்டாம், அதில் மீதமிருந்த இந்த மஞ்சள் கருவை சேர்த்து கலக்கினால் கெட்டியான கிரேவி தயார். அதேபோல பாஸ்தாவிலும் சேர்த்து சுவைக்கலாம். தண்ணீர் மற்றும் அதிக கொழுப்பு இருப்பதால், சூப்பைக் கெட்டியாக்கவும் மஞ்சள் கருவை பயன்படுத்தலாம். 

3. புட்டிங் மற்றும் கஸ்டர்ட்ஸ்


புட்டிங் மற்றும் கஸ்டர்ட்ஸ் செய்வதில் மஞ்சள் கரு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வகை ரெசிப்பிகளை கெட்டியாகவும் கிரீமியாகவும் வைத்து உங்களை விரும்பி சாப்பிட வைக்கிறது. 


4. மின்ஸ்டு மீட்


பர்கருக்கு கெட்டியான மின்ஸ்டு மீட் தேவையா? அத்ற்கு நீங்கள் மஞ்சள் கருவைப் பயன்படுத்துங்கள். இறைச்சியுடன் சீஸ், சேர்க்கும் போது மஞ்சள் கரு



வை சேர்த்தால் நல்ல ஃப்ளேவர் கிடைக்கும். கெட்டியாக இருக்கும்.


5.  ஃப்ளஃப்பி ப்ரெட்ஸ் மற்றும் எக் வாஷ்


பிரெட்கள் மிருதுவாக வருவதற்க்கு முட்டை கலக்கப்படுகிறது. மஞ்சள் கருவை சேர்த்து வீட்டிலேயே பிரெட் செய்தால் நன்றாக இருக்கும்.


6. க்ரீமி கப்கேக்


கப்கேக் செய்யும்போது முட்டையின் மஞ்சள்கருவை நன்றாக அடித்து கலவையில் சேர்த்தால், கேக் சாஃப்ட்டாகவும் சுவையாகவும் இருக்கும். அதோடு ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் தேவையான அளவு புரதமும், சக்தியும் கிடைக்கும்.