Srilanka Colombo (News 1st) நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 471 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Covid-19 தொற்றுக்குள்ளானவர்களில் 445 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சுகாதார வழிமுறைகளை திட்டமிட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளார்.
பொதுத் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது.
குழுவினூடாக கிடைக்கும் பரிந்துரைகளுக்கு அமைய, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.