Thursday, May 14, 2020

சுவை மிகுந்த புளியோதரை செய்முறை





தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் - 2 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:


நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் - 2


வறுத்து பொடிக்க வேண்டியவை:


மிளகாய் வத்தல் - 2
தனியா - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
எள்ளு - 1 மேஜைக்கரண்டி


செய்முறை:

அடுப்பில் வெறும் கடாயில் மிளகாய் வத்தல், தனியா விதை, வெந்தயம், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் எள்ளு சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப்  செய்து விடவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

புளியை 200 மில்லி தண்ணீரில் உறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு  தாளிக்கவும்.

கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின்னர் பெருங்காயத்தூள் சேர்க்கவும். புளித் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

புளிக் காய்ச்சல் கெட்டியானதும் உப்பு மற்றும் வறுத்து பொடித்த  தூளை சேர்த்து கிளறி அடுப்பை ஆப் பண்ணவும். ஆற வைத்துள்ள சாதத்தில் தேவையான அளவு புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது  சேர்த்துக் கொள்ளவும். சுவையான புளி சாதம் தயார்.

நாட்டுக்கோழி குழம்பு எளிய முறையில் தயாரிக்கும் முறை



தேவையான பொருள்கள்:

நாட்டுக்கோழி - 1/2 கிலோ 
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தயிர்  - 2 மேஜைக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
கொத்தமல்லித்தழை - சிறிது 
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
வறுத்து திரிக்க -
மிளகாய் வத்தல் -5
கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
மிளகு - 1 மேஜைக்கரண்டி 
வறுத்து அரைக்க -
தேங்காய் துருவல் - 100 கிராம்

              
தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
பட்டை - 1 இன்ச் அளவு 
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு





செய்முறை


முதலில் கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து விட்டு  சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
   
தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை   வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். 
                       
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், திரித்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை  போகும் வரை கொதிக்க விடவும்.                                                               

மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.      

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன

கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் பார்த்து வருகின்றனர். ஒரு குற்றம் நடந்தபின்னர் காவல்துறை அதற்குரிய விசாரணை செய்து தண்டனையும் குற்றவாளிகளுக்கு வாங்கி கொடுக்கின்றது. ஆனால் அந்த குற்றம் நடைபெறாமல் தடுப்பது ஒரு சமூகத்திடம்தான் உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் அந்த கடமை உள்ளது.

முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியோர்கள், தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை சொல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது அப்பா ஒரு பக்கம் மொபைலில் ஏதாவது பார்த்து கொண்டிருப்பார், அம்மா சீரியல் பார்த்து கொண்டிருப்பார், குழந்தைகள் இன்னொரு புறம் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் எதையாவது பார்த்து கொண்டிருப்பார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் செலவிடும் நேரம் மிக குறைவாக உள்ளது. அப்படியே குழந்தைகளிடம் பேசினாலும் அவர்களுக்கு நீதிபோதனை, அறிவுரைக்கதைகள் சொல்லி கொடுக்கும் வழக்கம் இப்போது சுத்தமாக இல்லை

ஒரு குடும்பத்தில் ஜனநாயகமான தன்மையோடும், எது பற்றியும் தயக்கமில்லாமல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளூம் வழக்கத்தையும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியது பெற்றோரின் அடிப்படை கடமை. இன்னும் சொல்ல போனால் அது குழந்தையின் உரிமையும்கூட.



ஒரு குற்றம் நடந்தபின்னர் அந்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையோ அல்லது குற்றம் நடந்த பகுதியின் காவல் துறை அதிகாரியைப் பணிமாற்றம் செய்தாலோ குற்றங்கள் குறையாது. குற்றங்களைக் குறைப்பதும், குற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்குவதும் எப்படி ஒரு அரசின் தலையாய கடமையோ அதேபோல் குழந்தைகள் மனதில் குற்றங்கள் செய்யும் மனப்பான்மை இல்லாமல் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை.

இதைப் பற்றி சிந்திக்க யாருக்குமே நேரம் இல்லாததால் தான் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.  நல்ல சமூகமாக நாம் இருக்க வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு ஆடம்பரப் பொருளை வாங்கித் தருவதில் கவனம் செலுத்தாமல், நல்ல கல்வி, நல்ல இயற்கை சூழல், நல்ல பழக்கவழக்கங்கள், சமூக அக்கறை, குடும்பச் சூழல், ஆண் பெண் புரிதல் இவற்றைப் போதிக்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின்பு கிடைக்கும் நல்ல சூழ்நிலைகள் மூலமே குற்றங்களைக் குறைக்க முடியும். வெறும் சட்டங்களை இயற்றினால் குற்றங்கள் ஒழியாது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

இந்த ஒரு பொருளை எப்போதும் வைத்திருங்க பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

மாதச்சம்பளம் வாங்குபவர்களில் வெகு சிலர் மட்டுமே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள்.

அடுத்தவர்கள் வைத்திருக்கும் பர்ஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி. அதற்கு முக்கிய காரணம் வாங்கும் சம்பளம், வாங்கிய அன்றைக்கே காணாமல் போவது தான்.

கையில வாங்குனேன் பையில போடலே… காசு போண எடம் தெரியல என்று பாட்டு பாடியே நாட்களை நகர்த்திக் கொண்டு வருபவர்கள். எப்பவும் பர்ஸ் நிறைய பணம் இருக்கணுமா? இதை படிக்கவும்.

நம்முடைய பர்ஸில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது.

என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்கவே கூடாது.

நாம் வைத்திருக்கும் பர்ஸானது நம்முடைய கை காசை போட்டு வாங்கவே கூடாது. நம்முடைய மனதுக்கு பிடித்தமானவர் அல்லது அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என பிரியமானவர்கள் யாராவது வாங்கிக் கொடுத்த பர்ஸாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இருந்தால் தான் நம்முடைய பர்ஸில் பணம் நிரந்தரமாக இருக்கும்.




நாம் வைத்திருக்கும் பர்ஸில் எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்றால், அதை முறையாக பராமரிப்பது அவசியமாகும்.

மேலும் நாம் வைத்திருக்கும் பர்ஸும் அழகாகவும், பணத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கவேண்டியது அவசியமாகும்.

அதற்கு நாம் வாங்கும் பர்ஸானது அழகிய பச்சை வண்ணம், பர்ப்பிள், நேவி ப்ளூ, பிங்க் போன்ற நிறங்களில் இருக்க வேண்டியது அவசியம்.

அப்படி இருந்தால் பர்ஸில் பணம் எளிதில் சேரும். மேலும் நாம் வாங்கும் பர்ஸும் ரூபாய் நோட்டுக்கள் கசங்காமல் எளில் நுழையும் வகையில் இருக்க வேண்டியது அவசியம்.

பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஏலக்காய், கொஞ்சம் சோம்பு, பச்சைக் கற்பூரம் போட்டு கட்டி அதை பர்ஸில் வைத்துக் கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது.

கூடவே நம்மை கடன் வாங்குதில் இருந்து தப்பிக்க வைக்கும்.

கடன் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது நிச்சயம்.

ஒருவேளை நாம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தாலும் கூட, வெகு சீக்கிரத்தில் அந்த கடனை அடைக்கும் வகையில் நம்முடைய பர்ஸில் பணம் சேர்ந்துவிடும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது





வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்திற்குள் உங்கள் உடலில் என்ன மாற்றங்கள். நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது.

டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.


ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.