Wednesday, May 13, 2020

உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீங்க




பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை நாலு பேர் முன் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும்.

அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.





குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.

பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல்.

பொதுவாக வாதம் முடக்குவாதம் வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது




முடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் தோட்டம் மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கொடி வகையைச் சேர்ந்தது. 

நகரத்தில் கீரை விற்பவர்களிடம் இந்த முடக்கத்தான் கீரை கிடைக்கும்.மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. 

ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும்.பிரச்னையைப் பொறுத்து சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இப்படிச் சாப்பிடும்போது சிலருக்கு சில நேரங்களில் தாராளமாக மலம் போகலாம். பயப்படத் தேவையில்லை. அதிகமானால் எலுமிச்சை சாறு குடிக்கலாம்; மலம் போவது நின்றுவிடும். 

இதேபோல் கை, கால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும்.மேற்சொன்ன பிரச்னை உள்ளவர்கள் காலை உணவான தோசையுடன் இந்த முடக்கத்தானை சேர்த்துக்கொள்ளலாம். 

அதாவது தோசை மாவுடன், அரைத்து வைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும். இதை அவ்வப்போது செய்து வரலாம். வாதம், வாயுத்தொல்லை உள்ளவர்கள்தான் என்றில்லாமல் எல்லோருமே இந்த முடக்கத்தான் தோசையைச் சாப்பிடலாம். காரக்குழம்பு, சாம்பார், ரசம், சூப் என பலவிதங்களிலும் முடக்கத்தான் கீரையைச் சமைத்து உண்ணலாம்.

இன்றைய அவசர உலகில் ஏதேதோ உணவுகளை உண்பதால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஏராளமாக உள்ளனர். இதற்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் நிவாரணம் கிடைக்காத நிலையில், பக்கவிளைவுகளே ஏற்படுகின்றன. அவர்கள் முடக்கத்தான் ரசம் வைத்து அருந்துவதால், தாராளமாக மலம் போகும். 

ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையுடன், கால் ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், தக்காளி ஒன்று, வெள்ளைப்பூண்டு 5 பல் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து பொறுக்கும் சூட்டில் அருந்தினால், மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக, இரவு வேளையில் இதை செய்தால் காலையில் தாராளமாக மலம் போகும்.

முட்டை பிரியாணி ரெசிபி செய்வது எப்படி




தேவையான பொருட்கள்


4 வேகவைத்த முட்டை
இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கியது
ஒரு சிறிய தக்காளி நறுக்கியது
கொத்தமல்லி தழை 1 தேக்கரண்டி
புதினா தழை ஒரு தேக்கரண்டி நறுக்கியது
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
தாவர எண்ணெய் 1.5 டேபிள் ஸ்பூன்
1 டேபிள் ஸ்பூன் தயிர்
பச்சை மிளகாய் 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டேபிள் ஸ்பூன்
½ டீ ஸ்பூன் மிளகாய் தூள்
½ தேக்கரண்டி மல்லி தூள்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
உப்பு சுவைகேற்ப‌
நான்கு கிராம்பு
பட்டை
2 ஏலக்காய்
¼ அளவு சீரகம்
4 மிளகு
பாசுமதி அரிசி
3 கிராம்பு
4 ஏலக்காய்
பட்டை
மராட்டி மொக்கு
இரண்டு பிரின்ஜி இலைகள்
5 புதினா இலைகள்
½ தேக்கரண்டி எண்ணெய்
¾ தேக்கரண்டி உப்பு
தேவையான அளவு நீர்

வழிமுறைகள்:

* பாசுமதி அரிசியுடன் கிராம்பு, பிரின்ஜி இலைகள், கிராம்பு, ஏலக்காய், புதினா இலைகள், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொண்டு, இதை ஆற விடவும்.

* கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கிக் கொண்டு இதில் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தை தனியே வைத்துக் கொள்ளவும்.

* இந்த சூடான வெங்காயத்துடன், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள‌ வேண்டும், பின் இதில் முட்டை மற்றும் நறுக்கப்பட்ட தக்காளி சேர்த்து நன்கு இந்த கலவையை கலந்து கொள்ளவும்.

* இந்த கலவையுடன் மீதமுள்ள தயிர் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் வேக வைக்கவும், பின் இதில்  மீதமுள்ள எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* இப்போது பெரிய பாத்திரம் எடுத்து கொண்டு பிரியாணி தயார் செய்ய, அதில் எண்ணெயை தடவி கொண்டு அதன் மீது முட்டை கலவையை பரவலாக போடு அதன் மீது அரிசியை போடவும்.

* இப்போது நீங்கள் உங்கள் முட்டை பிரியாணி செய்முறை சஞ்சீவ் கபூர் செய்முறை போல தயாராகி விட்டது. எனவே இந்த சஞ்சீவ் கபூர் பாணியிலான முட்டை பிரியாணி செய்முறையை நன்கு அலங்கரித்து சூடாக பரிமாறலாம் நீங்கள்

எலுமிச்சை பழத்தில் ஒளிந்திருக்கும் பல அதிசயங்களையும் அது அழகை மேம்படுத்த உடம்பிற்கும் சருமத்திற்கும் எப்படி பயன்படுகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம்.






எலுமிச்சை பழத்தை சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது?

இளமையுடன் இருக்க… 

உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம். 
எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்து போராடும்.

சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ் பேக் வேண்டுமா? 

அப்படியெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும் பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில் கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள்.


எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க…

எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும்.

சருமம் புத்துணர்வும், மென்மையும் அடைய…

எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்றவும் செய்யும்.

மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம். அழகிய இதழ்கள் எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம்.

அக்குள்களைப் பராமரிக்க…

நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே கிளம்புகிறீர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசுவதையும் பின்னர் தான் உணர்ந்தீர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எனவே எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம்.

உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்னென்ன என்பதை இனி அறிவோம்





உடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்

புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்ன என்பதை அறியலாம்.

உடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்
இன்று வருகின்ற நோய்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்மை அறியாமலே உள்ளுக்குள் பயம் வருகின்றது. சில வகையான நோய்கள் அறிகுறிகளை முன்கூட்டியே காட்டி விடும். ஆனால், சில வகையான கொடூரமான நோய்கள் உங்கள் உடலுக்குள் இருந்து கொண்டே இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்.

இந்த வகையான நோய்கள் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக நோய்களில் புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். 

நாம் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு புற்றுநோய்கள் ஏராளமான வகையில் உள்ளது. பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். பிறகு உடல் முழுக்க இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

கணைய புற்றுநோய்

கணையங்கள் மிக முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது. உங்களின் கணையம் பாதிக்கப்பட்டால் செரிமான கோளாறு, ஹார்மோன்கள் குறைபாடு, சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்றவை ஏற்படும். கணையத்தில் புற்றுநோய் வந்தால் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்பசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் கடைசி கட்டத்தில் ஏற்படும். ஆனால், இதனை பலர் தொப்பை விழுந்துள்ளதாக சாதாரணமாக கருதுகின்றனர்.

ப்ரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களை அதிகமாக தக்க கூடிய புற்றுநோய் வகைகளில் இது தான் முதலிடத்தில் உள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் தென்படுவது மிக கடினம். விந்தணுக்களுடன் சீழ் போன்று வருதல், பிறப்புறுப்பு வீங்குதல் போன்ற அறிகுறிகளை இவை இறுதியாக உணர்த்தும். அத்துடன் சிறுநீருடன் ரத்தமும் கலந்து வர கூடும்.

சிறுநீரக புற்றுநோய்

மிக கடினமாக கண்டறியப்படுகின்ற புற்றநோய் வகையை சார்ந்தது இது. ஆரம்ப நிலையில் எந்த ஒரு அறிகுறியையும் இது தருவதில்லை. ஆனால், இறுதி தருவாயில் பின் முதுகு வலி, திடீரென்று உடல் எடை குறைதல், சிறுநீரகத்தில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட கூடும். இதை முதல் நிலையில் அறிவது மிக கடினமாகும்.

நுரையீரல் புற்றுநோய்

புகை பிடிப்பதாலே பாதிக்கும் மேற்பட்டோர்க்கு இந்த புற்றுநோய் வருகிறது. இதன் அறிகுறிகளும் பல நாட்கள் உடலில் ஊறியே பின்னரே தெரிய வரும். ஆரம்ப நிலையில் X-ray எடுத்து பார்த்தல் கூட இந்த புற்றுநோய் இருப்பதாக கண்டறிய முடியாதாம். அதிக இரும்பல், நீண்ட நாள் காய்ச்சல், மூச்சு திணறல் ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.

கருப்பை புற்றுநோய்

ஆண்களை போலவே பெண்களை பிரத்தியேகமாக தாக்க கூடிய கொடூரமான புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகளை கண்டறிவது மிக கடினம். இவை பெண்களின் பிறப்புறுப்புகளில் உண்டாக கூடும். மலத்தில் ரத்தம் வருதல், குடலில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் பின்னாளில் தென்பட கூடும்.

சார்க்கோமா

தசைகளிலும் எலும்புகளிலும் உருவாக கூடிய புற்றுநோய் இது. குறிப்பாக கொழுப்புகளிலும், மெல்லிய திசுக்களிலும், நரம்புகளிலும், ரத்த நாளங்களிலும் இவை ஊடுருவி இருக்கும். மேலும், தோலில் அடிப்பகுதியில் இவை உருவாகவும் கூடும். இவை எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் வரலாம். இதன் அறிகுறியை ஆரம்பத்தில் அறிய இயலாது.

கல்லீரல் புற்றுநோய்

மிக மோசமான நோய்களில் இதுவும் அடங்கும். கல்லீரலில் புற்றுநோய் உண்டாக்கினால் கண்டறிவது மிக கடினமாகும். முதலில் கல்லீரல் வீங்க தொடங்கி, புற்றுநோய் செல்கள் கல்லீரல் முழுவதும் பரவும். சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் வர கூடும்.

விறைப்பை புற்றுநோய்

20 முதல் 45 வயதுடைய ஆண்களுக்கு இந்த புற்றுநோய் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. விந்தணுக்களை உருவாகும் போது அதனுடனே புற்றுநோய் கிருமிகளும் உருவாகி உயிரை எடுத்து விடும். இதனை முதல் நிலையில் அறிவது மிக கடினம்.

மூளை புற்றுநோய்

மூளை மற்றும் தண்டு வடத்தில் இந்த புற்றுநோய் செல்கள் உருவாக கூடும். இவை இறுதி நிலையில் தான் தனது அறிகுறியை வெளிப்படுத்தும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். அடிக்கடி தலைவலி, பேசுவதில் தடுமாற்றம், மண்டை பகுதியில் புதுவித அறிகுறி இருந்தால் மூளை புற்றுநோய் என்று அர்த்தம்.