Friday, May 15, 2020

தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.



நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.

சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.

ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.
இமைகளின் மேல் இந்த கலவையைப்பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்றி விடும்.

இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

தக்காளி சாறு- அரை டீஸ்பூன், 
தேன்அரை டீஸ்பூன், 
சமையல் சோடா- ஒரு சிட்டிகை. 

இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையமா அது எங்கே என்பார்கள்.

கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் பிளீஸ்… உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. 

இந்த தக்காளி பேஸ்ட்!

உருளைக்கிழங்கு துருவல் சாறு- ஒரு டீஸ்பூன், 
தக்காளி விழுது- அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாக காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்க.

தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை எடுங்கள்.

முதலில் முகத்தில் ஆலிவ் எண்ணையை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் ஒருமுறை இப்படி செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும்.

மன உனைச்சலை தவிர்த்து வாழ்ந்தால் உங்கள் உடல் இளமையாக இருக்கும்



சிரிச்சீங்கன்னா உங்க ரத்த நாளங்கள் ரிலாக்ஸ் ஆகி அதிக ரத்தத்தை பாய்ச்சும்! கடுகடுத்தீங்கன்னா, எதிர்மறை நடக்கும். ரத்தம் குறைஞ்சு ஏக டென்ஷன்.

நல்லா மூச்சு எடுங்க

இது பிரணாயாமம் இல்லை. ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், எலுமிச்சை, மல்லிகை,  துளசி போன்ற வாசனைகள் நல்லா முகர்ந்து பாருங்க! லினாலூல்ய் என்ற ஒரு கலவை இதில் உள்ளது. அது படபடப்பை குறைக்கும் சக்தி கொண்டது.

சூயிங்கம்

பசக் பசக் என்று சத்தம் போட்டு மற்றவர்களை எரிச்சல்படுத்தாமல், அமைதியாக மெல்லுங்கள். ‘சூயிங்கம், படபடப்பை குறைக்கும்’ என ஒரு சூயிங்கம் நிறுவனத்தார் ஆய்வு செய்து கூறியுள்ளனர்.

பிளாக் டீ 

பால் இல்லாமல் சக்கரை இல்லாமல் வெறும் தேநீரை குடித்து வர, நோய் டென்ஷன். உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறையும்!

‘சீ க்யுகாங்’ என்ற சீன பயிற்சி
சுவரை பார்த்தபடி நில்லுங்கள். தலையை இடது புறமாக திருப்பும் போது மூச்சை இழுங்கள். தலையை மீண்டும் நடுநிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை விடுங்கள். இப்படியே லெஃப்ட், ரைட் செய்து வர, சில நிமிடங்களில் நோ டென்ஷன்.

வாட்ஸ் அப் மூலம் பெண்களை தொடரும் ஆபத்து



பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது  வாட்ஸ் அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. ‘வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?’ என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில். இப்போது என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதை பார்க்கலாம்

* யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

* உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.

* கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.

* உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

* உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.




இதை எப்படி தவிர்க்கலாம்?

உங்களது வாட்ஸ் அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம்.

குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்த வரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்

ஆப்பிள் லஸ்ஸி எப்படிச் செய்வது





தேவையான பொருட்கள் :

கிரீன் ஆப்பிள் – 2
தயிர் – 2 கப்
பால் – கால் கப்
தண்ணீர் – கால் கப்
தேன் – 2 ஸ்பூன்

செய்முறை :

• கிரீன் ஆப்பிளை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

• மிக்சியில் ஆப்பிள், தயிர், பால், தண்ணீர், தேன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

• அரைத்த லஸ்ஸியில் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்.

• வெயிலுக்கு இதம் தரும் இந்த லஸ்ஸி.

Thursday, May 14, 2020

Live Singing with singer - @antonybala



He trained in classical music and worked as a music teacher.

He also a singer in " Thalam music group" from Germany 

Srilankan Time night 7.00pm - 8.00pm
German time  3.30pm - 4.30pm